ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள வரையரைக்கு மேலாக யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இது இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை நீக்கவே, ஈரான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. யுரேனியம் ​செறிவூட்டலை அதிகரிப்பது மூலம் அணுஆயுதங்கள் தயாரிக்கும் திட்டம் இல்லை என்றும் அந்நாடு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply