ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் ரத்து: டிரம்ப் அதிரடி

ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் ரத்து: டிரம்ப் அதிரடி

ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். 2015ம் ஆண்டில், ஈரானுடன் அப்போதைய அதிபர் ஒபாமா செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த டிரம்ப் அது மிக மோசமான ஒப்பந்தம் என்றும் விமர்சித்துள்ளார்.

ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து 60 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே அந்நாட்டுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply