ஈரான் ஈராக் எல்லையில் 750 பேர் காயம்: பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
நேற்று ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால் 750 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் ஒருவர் சிகிச்சையின் பலனின்றி பலியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஈரான் – ஈராக் நாடுகளின் எல்லையில் நேற்று முன்தினம் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக அறிவித்துள்ள ஈரான் அரசு மீட்புப்பணிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாகவும், இந்த பகுதியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப பல மாதங்கள் ஆகும் என்றும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன