ஈரான்: பார்ட்டியில் மது அருந்தி நடனமாடிய இளம்பெண்கள் கைது

ஈரான்: பார்ட்டியில் மது அருந்தி நடனமாடிய இளம்பெண்கள் கைது

ஈரான் நாட்டில் இஸ்லாம் சட்டத்திற்கு எதிராக பார்ட்டி நிகழ்ச்சியில் மது அருந்தி விட்டு நடனமாடிய இளம்பெண்கள் உள்பட 230 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டில் பார்ட்டிகளில் மது அருந்துவது இஸ்லாம் சட்டப்பட்டி குற்றம் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் குறைவான அளவில் உடை அணிவது, மது அருந்துவது, பொது இடத்தில் நடனமாடுவது ஆகியவை கடுமையான குற்றங்களாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரு இடங்களில் நடந்த பார்ட்டியில் மது அருந்திவிட்டு பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்கள் உள்பட 230 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பார்ட்டிக்கு சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுத்தவர், பார்ட்டியை ஏற்பாடு செய்தவர், பார்ட்டியில் பாடிய பாடகர்கள், மது சப்ளை செய்தவர்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply