ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: உறுதி செய்த அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் ‘கடந்த
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி அச்சுறுத்தும் வகையில் பறந்து வந்த ஈரானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறினார்.
அமெரிக்க வீரர்களையும், நாட்டு நலன்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருப்பதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார்
ஈரான் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது