ஈரான் விவகாரம்: அமெரிக்கா, ரஷ்யா மறைமுக மோதல்

ஈரான் விவகாரம்: அமெரிக்கா, ரஷ்யா மறைமுக மோதல்

வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்த முயற்சி செய்வோம் என்று ரஷ்யா கூறியுள்ளது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மறைமுக மோதலை குறிப்பதாகவே கருதப்படுகிறது

வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறியுள்ளன. குறிப்பாக ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply