உங்களுக்காக நான் தினமும் சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்: கருணாநிதிக்கு 3ஆம் வகுப்பு சிறுவனின் கடிதம்

உங்களுக்காக நான் தினமும் சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்: கருணாநிதிக்கு 3ஆம் வகுப்பு சிறுவனின் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி ஐந்தாவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் அவருடைய உடல்நலம் விசாரித்து கடிதம் எழுதியுள்ளான்.

தி.மு.க. தலைவா் கருணாநிதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்

இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், காங்கிரஸ் தலைவர் ராகுல் நடிகர்கள் ரஜினி, விஜய் அஜித் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் டோர் நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த மிக்கலே மிராக்ளின் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் மழலை மொழியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் அவன், ‘கருணாநிதி தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைனு சொல்றாங்க. இத கேட்டு எனக்கு அழுகையா வருது. உங்களுக்காக நா தினமும் சாமி கும்பிட்டுட்டு இருக்கேன். நீங்க சீக்கரம் குணமாகனும்.’ இவ்வாறு அந்த கடித்தில் ஆங்கிலத்தில் கூறியுள்ளான்

Leave a Reply