உங்களுக்கு எல்லாம் என்னடா இருக்கு? மானங்கெட்ட பயலுகளா? எச்.ராஜா ஆவேசம்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
ஸ்டாலின் மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை. அவர் இந்த மண்ணுக்கு எதிரி, இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு எதிரி, பண்பாட்டுக்கு எதிரி.
தஞ்சையில் குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என்று கூற ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. மதம் வேறு மொழி வேறு. இதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தலையிடாமல் இருக்க வேண்டும்
இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் அதில் ஒரு உண்மை தெரியும். உங்களுக்கு எல்லாம் என்னடா இருக்குது? மானங்கெட்ட பயலுகளா1
திமுக தற்போது திகவாகவும், முஸ்லீம் லீக் ஆகவும் மாறிவிட்டது எனவே ஸ்டாலின் இந்த நாட்டின் கலாச்சாரம் தொன்மை ஆகியவற்றை நீங்கள் கொச்சைப் படுத்தினாலோ, கேள்வி எழுப்பினாலோ அதற்கான விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி!
Watch : https://t.co/24ybulPuwa pic.twitter.com/V1i84XfAkJ
— H Raja (@HRajaBJP) February 3, 2020