ஓகே கூகுள் என்று உங்கள் போனில் கூறி பாருங்கள். அதன் பின் நடப்பவை உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனில் யார் செல்போன் நம்பரையும் தேடாமல், யாருக்கும் விரல் வலிக்க எஸ்.எம்.எஸ் டைப் செய்யாமல் உங்களால் போன் செய்ய அல்லது எஸ்.எம்.எஸ் செய்ய முடியுமா என்று யாரவது கேட்டால் இனி முடியும் என்று சொல்லுங்கள். அதற்காக தான் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது ஓகே கூகுள்!
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆண்ட்ராய்டு போனை எடுத்து இணையதள இணைப்பு இருக்கும் போது ஓகே கூகுள் என்று கூறுங்கள். அது உங்களது கமெண்ட்டுக்காக காத்திருக்கும். கால் உங்கள் நண்பரின் பெயரை கூறுங்கள். அதே பேரில் இரண்டு பேர் இருந்தால் ஃபர்ஸ்ட் ஒன் என்று கூறினால் முதலில் உள்ளவருக்கு கால் செல்லும். அதேபோல் எஸ்.எம்.எஸ் நபரின் பெயரை கூறினால் அதற்கான பக்கம் திறக்கும். பின்னர் நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை கூறினால் தானாக அந்த செய்தி குறிபிட்ட நபருக்கு சென்றுவிடும்.
இதேபோல் இணையதள தேடல், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை பயன்படுத்தலாம். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்கோர் வேண்டுமெனில் ஸ்கோர் சிஎஸ்கே என்றால் போதும் லைவ் ஸ்கோர் உங்கள் கண் முன்னே நிற்கும்.
ப்ளஸ்!
1.விரல்களை பயன்படுத்தி எண்களையும், வார்த்தைகளையும் டைப் செய்ய தேவையில்லை,
2.செல்போனின் டிஸ்ப்ளே அமைப்பு பாதுகாக்கப்படும்.
3.கண் தெரியாதவர்கள் கூட ஸ்மார்ட் போனை திறமையாக கையாள முடியும்.
மைனஸ்!
1.ஹெட் போன் பயன்படுத்தும் போது உள்ள துல்லியதன்மை சாதாரண நேரங்களில் இல்லை!
2.ஆங்கில உச்சரிப்பு சரியாக இல்லாத ஒருவருக்கு சற்று சிரமமாக இருக்கும்.
ஆனாலும் இன்றைய டெக் இளைஞர்கள் மத்தியில் இந்த ஓகே கூகுள் பிரபலமாகி வருகிறது. இன்று பலர் ஓகே கூகுள். டேக் செல்ஃபி என்று கூறு கொண்டு சென்றால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள். அவர்கள் தங்கள் செல்போனை ரோபோ போல் மாற்றியுள்ளனர் என நினைத்து கொள்ளுங்கள். இப்போது கூட ஓகே கூகுள்! என்று கூறி சிலர் இந்த கட்டுரையை படித்து கொண்டிருந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.