உங்கள் குளியலறை எப்படியிருக்கிறது?
நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் இடம் குளியலறை. ஆனால் அதிகமான அழுக்குச் சேரும் இடமும் இதுதான். அதனால் முடிந்தால் குளியலறையைத் தினமும் சுத்தப்படுத்துவது மிகவும் நல்லது. நம்மைச் சுத்தப்படுத்துவதுபோல அறையையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நம் சுவரின் இரு பக்கங்களிலும் அழுக்கு ஒரு படிவமாக படிந்துவிடும். அது வெறும் அழுக்கு மட்டுமல்ல. சின்னச் சின்ன கிருமிகளின் இருப்பிடமாகவும் இருக்கும்.
மேலும் குளியலறைக் குழாய்களிலும் சுவரிலும் கிருமிகள் இருக்கும். இம்மாதிரி தண்ணீர் விழும் இடங்களைக் கிருமிகள் வசிப்பிடமாகக் கொள்கின்றன. அதனால் குழாய்களைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும் சிறிது நீர் வெளியேறும் வரை குழாயைத் திறந்து வைத்து. அதன் பிறகு உபயோகிக்க வேண்டும்.