உங்கள் பான்கார்டு ஆதாருடன் இணைந்துவிட்டதா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் பான்கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும், இம்மாதம் அதாவது செப்டம்பர் 30ஆம் தேதிதான் பான் கார்டு ஆதாருடன் இணைக்க கடைசி நாள் என்றும், ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்து விட்டதால் மீண்டும் கால அவகாசம் கிடையாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நம்முடைய பான்கார்டு ஆதாருடன் இணைந்துவிட்டதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்ப்போம். நீங்கள் ஏற்கனவே வரி செலுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் பான்கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் அதனை உறுதி செய்து கொள்ள www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று லாகின் செய்யுங்கள். லாகின் ஐடி, உங்கள் பான்கார்டு மற்றும் பிறந்த நாள் தேதியாக இருக்கும். அதில் profile setting சென்று கடைசியில் உள்ள லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்தால் உங்கள் பான்கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும்