உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி: 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி: 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் பி தரத்திலான 57 இளநிலை உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 57
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், தட்டச்சு மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: www.sci.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sci.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply