உடனடியாக வெளியேறுங்கள்: மெட்ரோ ரயில் அறிவிப்பால் பதட்டமடைந்த பயணிகள்
சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற அவசரகால அறிவிப்பால் பயணிகள் பதட்டமடைந்து அவசரமாக வெளியேறினர்.
ஆனால் இதுகுறித்த விசாரணைக்கு ️பின்னர் தவறுதலாக யாரோ அவசர கால பொத்தானை அழுத்தியதாக நிர்வாகம் விளக்கமளித்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது