உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: 11 பேர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பு
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கான தண்டனை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த நிலையில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆகியுள்ளதால் தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது.
இன்று மதியம் 12.50 மணிக்கு குற்றவாளிகள் அனைவருக்குமான தண்டனையுடன் கூடிய விரிவான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.