வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஒன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் மத்திய அரசு வேளாண் மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது
இந்த மசோதாக்கள் விரைவில் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் அமைச்சர் ஒருவர் பதவி விலகிய நிலையில் தற்போது அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளது
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிரோன்மணி அகாலிதளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது