உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்: வருத்தம் தெரிவித்தார் கருணாஸ்

உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்: வருத்தம் தெரிவித்தார் கருணாஸ்

சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதால் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தான் உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருந்துவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்?

கூவத்தூர் சம்பவம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா?, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன்.

முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Leave a Reply