உதயநிதி ஸ்டாலினால் திமுக உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உதயநிதி ஸ்டாலினால் திமுக உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அண்ணா- கருணாநிதி காலத்தில் இருந்தவர்கள் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள், ஒரு அணியாகவும், திமுக இரண்டாக உடைய வாய்ப்பு இருப்பதாகவும், இது வரும் 23-ம் தேதிக்கு பின்னர் நடக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் பகுதியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ‘வரும் 23-ம் தேதி 11 மணிக்கு பிறகு, வாக்கு எண்ணிக்கை முடிவு வரும்போது, அதிமுக முன்னிலை, முன்னிலை என தகவல் வரும் என்றும், 4 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவே, மற்ற கட்சிகள் போராடி வருவதாகவும், ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply