உபரி நீர் கணக்கில் வராது: மீண்டும் மோதும் தமிழகம்-கர்நாடகம்
தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்துவதும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கர்நாடகம் கூறி வருவதும் வழக்கமான ஒன்றே
இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக கர்நாடகாவில் கனமழை பெய்ததால் உபரிநீர் அதிகளவில் காவிரியில் இருந்து திறந்துவிடப்பட்டது. தமிழகத்திற்கு ஓராண்டு தர வேண்டிய நீர், உபரி நீர் மூலம் இரண்டே மாதங்களில் 53% திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
ஆனால் உபரி நீர்திறந்துவிடுவதை கணக்கில் எடுத்து கொள்ள முடியாது என்று தமிழக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேலும் உபரி நீரை திறந்துவிட்டு கர்நாடக அரசு கணக்கில் காட்டுவதை தமிழக அரசு ஏற்க கூடாது என்று தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.