உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய இருக்கும் நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் கோவா பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் ஏற்கனவே கொரோனா காலத்தில் தேர்தல் நடத்திய அனுபவம் தங்களுக்கு இருப்பதால் மிக எளிதாக தேர்தலை நடத்தி விடலாம் என்றும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் தேர்தல் நடத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் தவிர மீதி உள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது