உயிருக்கு ஆபத்தான நிலையில் தாவூத்?
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மும்பையில், கடந்த 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 1,000த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவாக வாழ்ந்து, பின் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான்.
ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டை, பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல வழக்குகளிலும், இவன் தேடப்பட்டு வருகிறான். இந்நிலையில், இவன் இதயநோய் காரணமாக, கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவரது உடல்நிலை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதை அவனது கூட்டாளி சோட்டா சாஹில், குடும்பத்தினர் மறுத்துள்ளனர். தாவூத் நிலைமையை இந்திய உளவுத்துறை தொடந்து கண்காணித்து வருகின்றனர்.