உருளைக்கிழங்கு வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி
தான் காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்கை பயிரிட்ட 9 விவசாயிகள் மீது பதிவு செய்திருந்த வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது
பெப்சி நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ்களை தயாரிக்க கடந்த 2009ஆம் ஆண்டு எப்.எல். 2027 எனப்படும் புதுவகை உருளைக்கிங்கிற்கு பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றது. இந்த வகை உருளைக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டதாக புகார் தெரிவித்த பெப்சி நிறுவனம், 9 விவசாயிகள் மீது ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தது
இந்த நிலையில் குஜராத் அரசின் முயற்சியை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது அந்த வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது