உருளை தயிர் முறுக்கு செய்வது எப்படி?

உருளை தயிர் முறுக்கு செய்வது எப்படி?

என்னென்ன தேவை ?

உருளைக் கிழங்கு – 4

தயிர் – அரை கப்

அரிசி மாவு – 2 கப்

பொட்டுக் கடலை மாவு – 1 கப்

சீரகம் அல்லது எள் – 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது ?

உருளைக் கிழங்கை வேகவிட்டுத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், பெருங்காயத் தூள், மசித்த உருளை விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுங்கள்.

Leave a Reply