உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா? பிசிசிஐ விளக்கம்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா? பிசிசிஐ விளக்கம்

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர் பலியான நிலையில் பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

அந்த வகையில் வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்ற குரல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என்று ஐசிசி அறிவித்துள்ளது

மேலும் உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை நாங்கள் அணுகவில்லை என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Leave a Reply