உலகக்கோப்பை கால்பந்து போட்டியயை காண ரஷ்யா வரும் பிரான்ஸ் பிரதமர்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து வரும் 10ஆம் தேதி பிரான்ஸ் அனி, பெல்ஜியம் அணியுடன் அரையிறுதியில் மோதுகிறது. இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க பிரான்ஸ் அதிபர் மெக்ரான் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முடிவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து, ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் கூறுகையில், உலக கோப்பை போட்டியை காண வரும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் முடிவை ரஷியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் இந்த வருகையின்போது அவரிடம் முக்கிய பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.