உலகம் முழுவதும் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்: காரணம் என்ன?
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியதால் அதன் கோடிக்கணக்கான பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த முடக்கம் சற்று நேரமே இருந்தால் அந்த நேரத்தில் புகைப்படங்களைப் பகிர பயனாளிகள் சிரமப்பட்டனர். பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றுக்குப் பிறகு பிரபலமான சமூக வலைத்தளமாகவும், உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சிறிது நேரம் மட்டும் நீடித்த இந்த கோளாறினால் பல்வேறு அம்சங்கள் முடங்கியுள்ளன.
குறிப்பாக லாகின் செய்ய முடியவில்லை என்றும் நியூஸ்ஃபீட் பார்க்க முடியவில்லை என்றும் பலர் புகார்களை மற்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பதிவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை சரியாகிவிட்டது. இந்த கோளாறு தொழில்நுட்ப கோளாறினால் ஏற்பட்டது என கூறப்படுகிறது
instagram suffers brief outage in multiple countries