உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியல். 56 இந்திய நிறுவனங்கள் இடம்பிடித்தன
உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியல் ஒன்றை ப்ரபல அமெரிக்க நிறுவனமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 2000 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 586 நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 56 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சீனாவை சேர்ந்த ஐசிபிசி, சிசிபி, ஏபிசி ஆகிய வங்கிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் 10-ஆவது இடத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 142-ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 121-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3.39 லட்சம் கோடி, சொத்து மதிப்பு ரூ.6.14 லட்சம் கோடியாகவும் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி, 149-ஆவது இடத்தில் உள்ளது. இதுதவிர, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, இந்தியன் ஆயில், டிசிஎஸ், என்டிபிசி, பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், அதானி குழுமம், விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.