உலகின் மிக சுத்தமான விமான நிறுவனம் எது? கருத்துக்கணிப்பு முடிவுகள்

airlinesஉலகின் மிகவும் தூய்மையான விமான நிறுவனம் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் முதல் பத்து இடங்களில் இந்திய விமான நிறுவனங்கள் எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கைடிராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகளுக்காக ஒவ்வொரு வருடமும் சிறந்த ஏர்லைன் தேர்வு செய்யும் கருத்துக்கணிப்பு நடத்தப்படும். விமானத்தில் உள்ள வசதிகள், சீட்டின் செளகரியங்கள், வழங்கப்படும் சேவைகள், மற்றும் பல அம்சங்களை ஆராய்ந்து சிறந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும்.

இந்த பட்டியலில் தைவான் நாட்டை சேர்ந்த  EVA Air என்ற நிறுவனம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏ.என்.ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 245 விமான நிறுவனங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டதாகவும் சுமார் 18 மில்லியன் பயணிகளிடம் கருத்து கேட்டு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த விமான நிறுவனங்களின் பெயர்கள் வருமாறு:

1. EVA Air

2. Singapore Airlines

3. ANA All Nippon Airways

4. Cathay Pacific

5. Asiana Airlines

6. Garuda Indonesia

7. Japan Airlines

8. Hainan Airlines

9. Korean Air

10. Hong Kong Airlines

Leave a Reply