உலகிலேயே காதலர் தினம் கொண்டாட சிறந்த நகரங்கள் எது? கருத்துக்கணிப்பு முடிவு
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்களுக்குரிய இந்த சிறப்பு நாளை ஒரு சிறந்த நகரத்தில் கொண்டாடினால் எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜி.எப்.கே என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் நகரம் எது என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது. இதன்படி சமீபத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாரீஸ் நகரம் உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகருக்கு 69 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.
உலகின் மிகச்சிறந்த ரொமாண்டிக் நகர பட்டியலில் இத்தாலி தலைநகர் ரோமுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. 3வது இடத்தை இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரம் பெறுகிறது. இந்த நகரம் 43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நியூயார்க் 26 சதவீதமும் பார்சிலோனா 24 சதவீதமும் ரியோடி ஜெனிரோ 23 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.அடுத்த நான்கு இடங்களை சான்பிரான்ஸிஸ்கோ, கான்கன், லண்டன், வியன்னா நகரங்கள் பெற்றுள்ளன.
இதேபோல் உலகிலேயே டேட்டிங் செல்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் ‘ஹாலிவுட் புகழ்’ லாஸ் ஏஞ்சல்ஸ் முதலிடம் பிடிக்கிறது. இந்த நகருக்கு 41 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தில் நியூயார்க் வருகிறது. தொடர்ந்து மியாமி, பாரீஸ், ரோம், ரியோடி ஜெனிரோ, லாஸ் வேகாஸ், சான்பிரான்சிஸ்கோ, ஃப்ளோரன்ஸ், பார்சிலோனா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வருகின்றன.
உலகிலேயே ‘செக்ஸியஸ்ட்’ சிட்டி வரிசையில் பாரீஸ் 61 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தை பெறுகிறது. அடுத்த இடத்தை பெற்றுள்ள பிரேசிலின் ரியோடி ஜெனிரோவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. ஃப்ளேரன்ஸ், மியாமி, லாஸ்வோகாஸ் ஆகியவை பிற செக்ஸியஸ்ட் நகரங்கள்.