உலகில் முதல்முறையாக பெண்ணுறுப்பை விளக்குவதற்கு ஒரு கண்காட்சி:
பெண்களின் உள்ளுறுப்புகள் குறித்து படித்த பெண்கள் கூட பேச தயங்கி வரும் நிலையில் பெண்களின் உள்ளுறுப்புகள் குறித்து ஒரு கண்காட்சியை நடத்த பெண் ஒருவர் திட்டமிட்டுள்ளார்
பெண்களின் உள்ளுறுப்புகள் குறித்து பேசுவதற்கு பல பெண்கள் தயங்கி வருகின்றனர் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் பெண் உறுப்பான வஜைனா மற்றும் அதன் உள்ளே இருக்கும் சில முக்கிய பாகங்கள் குறித்து சிலை வடிவத்தில் ஒரு கண்காட்சி வைக்க ஃபிளோரா என்ற என்பவர் முடிவு செய்துள்ளார். லண்டனைச் சேர்ந்த இவர் இதுகுறித்து கூறும்போது ’நான் ஒருமுறை வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது ஆண் உறுப்புகளுக்கான மியூசியம் ஒன்று இருந்ததை பார்த்தேன். அதில் ஆண் உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும், அது குறித்த விழிப்புணர்வையும், ஆணுறுப்பு பாலியல் கல்வியும் கற்பிக்கப்பட்டது.
இதே மாதிரி பெண்ணுறுப்புக்கும் ஒரு கண்காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என் மனதில் தோன்றியது. உலகில் இதுவரை எங்குமே பெண்ணுறுப்புக்கு என் ஒரு கண்காட்சி இல்லாததால் நானே அதை தொடங்க முடிவு செய்தேன். பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் உடலில் உள்ள உறுப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால் இனிமேல் அவ்வாறு இருக்க முடியாது. பெண்கள் தங்களது பெண் உறுப்புகள் உள்பட அனைத்து உறுப்புகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது
பெண்ணுறுப்பு என்பது வெறும் சதையல்ல என்பதை ஆண்களுக்கு புரிய வைக்கவும், இந்த அருங்காட்சியகம் உதவும் என நம்புகிறேன் இது வெறும் கண்காட்சியாக மட்டும் இருக்காமல் பள்ளி மாணவிகளுக்கும்ல் பெண் குழந்தைகளுக்கும் ஒரு பாலியல் கல்வி கற்றுக் கொள்ளும் அருங்காட்சியகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
பெண் உடல் உறுப்புகள் தொடர்பான ஆரோக்கியம் மற்றும் பாலியல் உறவு குறித்த விஷயங்களையும் மருத்துவர்கள் உதவியுடன் இந்த அருங்காட்சியகத்தில் வரும் பெண்களுக்கு விளக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் இந்த அருங்காட்சியகத்திற்கு சில பெண் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன இருப்பினும் நான் அவற்றை கண்டுகொள்ளாமல் இந்த அருங்காட்சியகத்தை அமைக்க தீவிர முயற்சியாக உள்ளேன் என்று கூறியுள்ளார்