உலகெங்கும் வேலை வாய்ப்பு வழங்கும் முதுமையியல் படிப்பு!

உலகெங்கும் வேலை வாய்ப்பு வழங்கும் முதுமையியல் படிப்பு!

வயதானவர்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் உள்ளது. கணினி யுகத்தில் இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில் முதியவர்களை உபசரிக்க நேரம் ஏது?
இந்த கேள்வியோடு சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்னரே தோன்றியதுதான் Gerontology (முதுமையியல்) என்ற வார்த்தை.
அப்போது தொடங்கிய விவாதங்கள் தொடர்ந்து 1945-இல் உச்சம் பெற்றதையடுத்து உருவானதே அமெரிக்க முதுமையியல் சங்கம் (Gerontological Society of America). 1958-இல் இதுகுறித்த ஆய்வுகள் வலுப்பெற்று, 1967-இல் தெற்கு ப்ளோரிடா மற்றும் வடக்கு டெக்ஸôஸ் பல்கலைக்கழகங்களில் Gerontology பாடத்தில் முதன் முதலாக பட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதே சமயத்தில் 1965-இல் ஜார்ஜியாவில் தோன்றிய Institute of Gerontology முதுமையியல் குறித்த பட்டக் கல்வியை அந்த நாட்டில் வழங்கத் தொடங்கியது.
நாம் முதுமை அடையும்போது நம்மில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து படிக்கும் அறிவியலின் ஒரு பிரிவே ஜெரன்டாலஜி. இதில் பயோஜெரன்டாலஜி, சோசியல் ஜெரன்டாலஜி என 2 முக்கியப் பிரிவுகள் உள்ளன.
பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் ஜெரன்டாலஜி பாடத்தில் பட்டக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஆனால், பல நிறுவனங்கள் முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்துகின்றன.
அதோடு, வழக்கமான சோசியல் ஒர்க், சைக்காலஜி, சோசியாலஜி மற்றும் உடல்நலம் தொடர்பான கல்வியில் ஜெரன்டாலஜி சிறப்புப் பாடமாக இடம்பெற்றுள்ளது.
ஆனால், அயல்நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இளநிலை முதுமையியல் கல்வியை வழங்கி வருகின்றன. தொடக்கநிலை ஜெரன்டாலஜிஸ்ட்- ஆகப் பணியாற்ற இந்த இளநிலைப் பட்டம் போதுமானது.
அதேநேரத்தில் முதுநிலை முதுமையியல் மற்றும் முதுமையியல் முனைவர் ஆய்வுப் பட்டங்கள் இந்தத் துறையில் அதிக வேலைவாய்ப்புகளையும், அதிகபட்ச ஊதியத்தையும் பெற்றுத் தரும்.
Nations Population Fund And HelpAge India தகவலில், இந்தியாவில் 2011}ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முதியவர்கள் 9 கோடிக்கும் அதிகமாக உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 10 ஆண்டுகளில் (2026) 17.3 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 கோடியில், 3 கோடி பேர் ஆதரவற்று தனிமையில் வசிப்பதாகவும், எஞ்சியுள்ள 6 கோடி பேரில் 90 சதவீதம் பேர் வாழ்க்கைத் தேவைக்காக வேலைக்குச் செல்வதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதையொட்டியே நம் நாட்டில் The National Institute of Social Defense (NISD) அமைப்பின் முதியோர் சேவை பிரிவு, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் செயலாக்கத் துறையின் மண்டல திறன் பயிற்சி மையங்களுடன் இணைந்து 2 விதமான பாடத்திட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
இதில் முதுமையியலை உட்கூறாகக் கொண்ட டஎ PG Diploma in Integrated Geriatric Care KWôiÓ T¥l×m, Geriatric Care Nôu±Rr T¥lTôL Basic Course for CaregiversBed Assistants, Thematic Issues (3 months), Basic Issues in Geriatric Care (1 month), Geriatric Counselling, Management of Dementia Training Programmes எனவும் வழங்கப்படுகின்றன. இதில் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது. நம் நாட்டில் பொதுவாக அதிகமாகக் காணப்படுவது ஜெரியாட்ரிக் பயிற்சிகள்தாம். இது முதியவர்களுக்கான மருத்துவம், மருந்து சார்ந்த சிறப்புப் பிரிவாகும். ஆனால், ஜெரன்டாலஜி என்பது முதியவர்களுக்கான உடல், மனநலன், சமூகம் சார்ந்த தீர்வுகளுக்கான பிரிவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நமது முடிவைப் பொருத்தது.
சமூகப் பணியாளர், செவிலியர், மருத்துவமனைகளில் நிர்வாகப் பொறுப்பு, மருந்து மற்றும் ஆராய்ச்சி துறைகள், முதியோர் மையங்கள், தனியார் நிறுவன ஆலோசகர்கள், முதியோர் ஓய்வுகால திட்டங்கள், முதியோர் மேம்பாட்டு கல்வித் திட்டங்கள், ஆசிரியர், முதியோர் சட்ட ஆலோசகர் என முதுமையியலில் நம் கல்வித் திட்டத்துக்கு ஏற்ப பல பதவிகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
ஊதியத்தைப் பொருத்தவரை நாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. மந ஆன்ழ்ங்ஹன் ர்ச் கஹக்ஷர்ழ் நற்ஹற்ண்ள்ற்ண்ஸ்ரீள் தகவல்படி 2010-இல் தொழில்முறை பட்டம் முடித்த ஜெரன்டாலஜிஸ்ட்-க்கு ஆண்டுக்கு ரூ. 31 லட்சம், முதுநிலை பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 36 லட்சம், பெஸிலிட்டி டைரக்டர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ. 52 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. நம் நாட்டில் குறைந்தபட்சம் ரூ. 12 லட்சம் ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply