உலக சுற்றுலா தலங்கள் பட்டியல்: இந்தியாவின் தாஜ்மஹாலுக்கு எத்தனையாவது இடம்?

உலகில் ஆயிரக்கணக்கான சுற்றுலா தலங்கள் இருக்கும் நிலையில் இந்தியாவின் தாஜ்மஹாலுக்கு 6வது கிடைத்துள்ளது

உலகில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் விரும்புவது எவை எவை என்பது குறித்த ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. டிரிப் அட்வைசர் என்னும் தனியார் அமைப்பு நடத்திய இந்த ஆய்வுக்காக உலகில் உள்ள 68 நாடுகளில் உள்ள 759 முக்கியமான இடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் உலகளவில் முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்

முதல் இடத்தை கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஸ்பெயினில் உள்ள பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், ஆசிய அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை தாஜ்மகாலும், ஒன்பதாவது இடத்தை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், 10-வது இடத்தை பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply