உலக முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னையில் இன்று தொடக்கம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: சென்னையில் இன்று தொடக்கம்

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த தொடக்கவிழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளானர்.

தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுடன், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். வர்த்தக மையத்தில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுள்ளன. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply