உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பேசிய விவரம்
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாடு இன்று 5வது ஆண்டாக நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன. முதல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 3 முதல் 7 வருடங்கள் தொழில் நிறுவனங்கள் வருகைக்காக நிர்ணயிக்கப்பட்டன, அதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தன
தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்
இந்திய பொருளாதார வளர்ச்சியில், தமிழகத்தின் பங்கு 8.4 விழுக்காடு. வானூர்தி பூங்கா 200 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளது, இது 700 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை சார்ந்து தொழில் துவங்க 85 நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளன
இவ்வாறு முதல்வர் பேசினார்.