உலக லெவன் அணியை பந்தாடிய பாகிஸ்தான் வீரர்கள்

உலக லெவன் அணியை பந்தாடிய பாகிஸ்தான் வீரர்கள்

உலக லெவன் அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

உலக லெவன் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அந்நாட்டு அணியுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடியது. ஏற்கனவே இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நேற்று லாகூரில் 3வது போட்டி நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Leave a Reply