உலக வங்கியின் அறிக்கையில் முறைகேடு: காங்கிரஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டு

உலக வங்கியின் அறிக்கையில் முறைகேடு: காங்கிரஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டு

சமீபத்தில் உலக வங்கி இந்த ஆண்டு தொழில் தொடங்க உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா 100வது இடத்தை பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஜிஎஸ்டி நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 இடங்கள் முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த பட்டியல் குறித்து காங்கிரஸ் கட்சி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக வங்கிக்காக பட்டியல் எடுக்கும் தரகர்களை விலைக்கு வாங்கி உலக வங்கி வெளியிடும் தொழில் செய்ய உகந்த சூழல் நிலவும் நாடுகள் பட்டியலில் எளிதாக மாற்றங்களை நிகழ்த்தலாம் என்றும் ஆனால் இந்திய பொருளாதாரத்தில் பிரதமர் மோடி மற்றும் குழுவினர் ஏற்படுத்திய சேதத்தை சரிசெய்வது மிகவும் கடினம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்

தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்து உலக வங்கி வெளியிடும் அறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply