ப் பயணத்துக்கான குறைந்தபட்ச,அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்குள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 40 – 60 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 3,300 ரூபாயிலிருந்து 3,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
60 – 90 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 4,500 ரூபாயாகவும்,
90 – 120 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 4,700 ரூபாயிலிருந்து, 5,300ஆக அதிகரிக்கப்படுகிறது.
120 – 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயிலிருந்து, 6,700 ரூபாயாகவும்,
150 – 180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து 8,300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
180 – 210 நிமிடங்கள் வரை பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 8,700 ரூபாயிலிருந்து, 9,800 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.