உள்ளாட்சி தேர்தலில் 4 முனை போட்டி: வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
உள்ளாட்சி தேர்தைலில் ஆளும் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளது. பாமகவும் தனி அணியாக போட்டியிடும் என்பதால் இப்போதைக்கு நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரையில் கட்சி, சின்னம் ஆகியவற்றை காட்டிலும் உள்ளூர் பிரபலங்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பதால் இப்போதைக்கு யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்பு, பிரச்சாரம் ஆகிய ஆரம்பித்தவுடன் எந்த கட்சிக்கு சாதகமாக இந்த உள்ளாட்சி தேர்தல் இருக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்