உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால்! கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
ஒருபக்கம் கமல்ஹாசனும் இன்னொரு பக்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களும் தமிழகத்தில் கிராமம் கிராமாக சென்று கிராமசபி கூட்டம் நடத்தி அதில் பேசி வருகின்றனர்.
இந்த கிராமசபை கூட்டத்திலும் அந்தந்த பகுதிகளின் பிரச்சனைகளை பேசுவதைவிட அரசியல்தான் அதிகம் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் ‘உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும், சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறியும்,ஆட்சியாளர்கள் அதை பற்றி கவலைப்படவில்லை என்றும், எதிர்வரும் தேர்தல்களில் மத்திய – மாநில அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார்