உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நிலையில் சென்னை ஐகோர்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அளித்த தீர்ப்பு ஒன்றில், ‘நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதுகுறித்த அறிவிப்பை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply