உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற வேண்டாம் என தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்களை பெற வேண்டாம் என தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் டிசம்பர் 6 முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தவிர நடைபெறும் இந்தத் தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியின் சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று வேட்பாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை பொறுத்தே உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குமா? தொடங்காதா? என்பது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply