உ.பி, குஜராத் உள்பட 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள். ஜனாதிபதி உத்தரவு

8aஉத்தரபிரதேசம் உள்பட நான்கு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ராம் நாயக்கை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ராம் நாயக், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் தற்போது வகித்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் தாண்டனும், குஜராத் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக கேசரி நாத் திரிபாதியும், நாகாலாந்து மாநில ஆளுநராக பத்மநாபா பாலகிருஷ்ணா ஆச்சார்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திரிபுரா ஆளுநர் புருஷோத்தமனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், திரிபுரா மாநில ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் ஆச்சார்யா கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர்  மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply