ஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பா?
ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, முதல்கட்ட ஊக்கமருந்து சோதனையில் ஊக்கமருந்து சாப்பிட்டதாகவும், இரண்டாம் கட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து சாப்பிட்டதாக தெரிய வந்தால் அவரது பதக்கம் பறிக்கப்படுவதோடு, அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதில்லை என்றும், இந்த செய்தி முற்றிலும் தவறு என்றும் கூறியுள்ளார்.
ஊக்கமருந்து சோதனை குறித்த செய்தியை அடுத்து கோமதி மாரிமுத்துவை டுவிட்டர் பயனாளிகள் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்,