ஊதுபத்தி, மெழுகுவர்த்தி பொருத்த கூடாது: டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை
தீபாவளி அன்று ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கே சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்த நிலையில் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளை கூட பயன்படுத்த வேண்டாம் என டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மாசு அளவு ஓவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில், தலைநகர் டெல்லியில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் அளவீடு 401 என்ற அளவை எட்டியது. இந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபட்டு தரம் குறைந்திருப்பது இதுவே முதல்முறை.
இந்த நிலையில் மத்திய அரசின் காற்று தரக் கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான, ‘சபார்’ விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், “அறை ஜன்னல்களை மூடி விடுங்கள், அடிக்கடி வீட்டை ஈரத் துணியினால் துடைத்துக்கொள்ளுங்கள், விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தியைக் கூட கொளுத்துவதை நிறுத்தி விடுங்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.