ஊரடங்கு தளர்ந்தாலும் வாடிக்கையாளர்கள் வருவதில்லை:

மால் மற்றும் ஓட்டல் அதிபர்கள் புலம்பல்

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இருந்ததால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதை அடுத்து கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளனர்

ஆனால் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டாலும் பொதுமக்கள் வெளியே வருவதை குறைத்துவிட்டதாகவும், அப்படியே வெளியே வந்தாலும் ஜவுளி உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்க விரும்பவில்லை என்றும் குறிப்பாக
ஓட்டல்களில் சாப்பிட மக்கள் விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது

எனவே ஊரடங்கு முடிந்து மீண்டும் கடைகள் திறந்து வைக்கப்பட்டாலும் ஹோட்டல்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் கூட்டம் மிகவும் குறைவாக வருவதாகவும் அப்படியே வரும் வாடிக்கையாளர்கள் மிக குறைந்த அளவே பர்சேஸ் செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஊரடங்கிற்கு முன் விற்பனையானதில் பாதி கூட தற்போது இல்லை என்பதால் வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் கொடுக்கவே உரிமையாளர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதே நிலை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்று கூறப்படுவதால் இந்த ஆண்டு தீபாவளி கிறிஸ்துமஸ் பண்டிகை கால விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply