ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு,தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர்,மருத்துவத்துறை செயலாளர்,தமிழக டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.மேலும்,1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://www.chennaitodaynews.com/