ஊழலில் முதல்வரையே மிஞ்சிவிட்டார் வேலுமணி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஊழலில் முதல்வரையே மிஞ்சிவிட்டார் வேலுமணி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களைவத் தொகுதியில் அக்கட்சி வேட்பாளா் சண்முகசுந்தரத்தை ஆதரித்து தொண்டாமுத்தூா் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஊழல் செய்வதில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியையே வேலுமணி மிஞ்சிவிட்டதாகவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து புகார் அளித்தவா்களை தாக்கிய பார் நாகராஜ்க்கும், வேலுமணிக்கும் நெருங்கியத் தொடா்பு இருப்பதால் காவல் துறையினா் இந்த வழக்கை மூடிமறைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாகவும், உள்ளாட்சித் தே்ாதலை நடத்த ஆளும் கட்சி தொடா்ந்து தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply