ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் கமல் கூட்டணியில் இணைய வேண்டும் என கமல் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்
ப.சிதம்பரம் அவர்கள் எங்களுடைய மூன்றாவது அணியை பார்த்து பாஜகவின் ’பி’ டீம் என்று கூறுகிறார். ஆனால் பாஜக ஆட்சி வருவதற்கு காரணம் 2ஜி ஊழல் தான். அந்த ஊழலை செய்த திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தான் ‘பி’ டீமே, தவிர எங்கள் கூட்டணி அல்ல என்று அவர் பதிலளித்தார்
மேலும் ஊழல் ஒழிய வேண்டும் என்பதற்காக முயற்சித்து வரும் கமலஹாசனுக்கு ஒத்த கருத்துடைய அரசியல் தலைவர்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கமல் கூட்டணியுடன் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்