எங்கு தவறு செய்தோம்? படுதோல்வி குறித்து ரோஹித் சர்மா கருத்து

எங்கு தவறு செய்தோம்? படுதோல்வி குறித்து ரோஹித் சர்மா கருத்து

நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது குறித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் சில மோசமான ஷாட்டுகள் அடித்து ஆட்டமிழந்தோம். பந்து ஸ்விங் ஆகும்போது எப்போதுமே சவால்தான். பந்து ஸ்விங் ஆனால், சற்று நேரம் கிடைக்கும். அதற்குள் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும். இந்தத் தோல்வியில் நாங்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், அதேநேரத்தில் பந்து ஸ்விங் ஆகும்போது எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

ஒருநாள் போட்டியில் ஏராளமான தொடர்களில் நாங்கள் அதிக அளவு ரன்கள் குவித்துள்ளோம். எங்கு தவறு செய்தோம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களை கடிந்து கொள்வது அவசியம். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை நாம் பாராட்டியாக வேண்டும். இது அவர்களின் அற்புதமான முயற்சி.

இவ்வாறு ரோஹித்சர்மா தெரிவித்தார்.

 

Leave a Reply