எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை: தமிழக அரசு

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை: தமிழக அரசு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றும், எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் எச்ஐவி தொற்று உள்ளவர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே கர்ப்பிணி உட்பட 2 பேருக்கு சோதனை செய்யப்பட்டதாகவும், கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் திருப்தி பெறாவிட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், சுகாதார செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு வேலை உள்பட உரிய நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும்சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply