எச்.ஐ.வி ரத்தம் தானம் கொடுத்த இளளஞரின் உடல் பிரேத பரிசோதனை: நீதிமன்றம் உத்தரவு
சாத்தூர் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி ரத்தம் தானமாக கொடுத்த இளைஞர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அவருடைய உறவினர்கள் நிபந்தனைகள் விதித்து வந்தனர்.
இதுகுறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இருவேறு மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை நடத்த கோரிய உறவினர்களின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும் ரத்தத்தை தானமாக கொடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்த இளைஞனின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து எச்.ஐ.வி. ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.